கால்வாயை சீரமைக்க வேண்டி ஆர்ப்பாட்டம்

கால்வாயை சீரமைக்க வேண்டி ஆர்ப்பாட்டம்
X
அரக்கோணம் அருகே நீர்வரத்து கால்வாய் முறையாக பராமரிக்க படவில்லை எனக் கூறி கிராம மக்கள் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம்.

அரக்கோணம் அடுத்த மேலேறி கிராமத்தில் கடைமடை ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயை குடிமராமத்து பணிகள் மூலமாக முறையாக பராமரிக்க படாததால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் நிரம்பி இருந்த நிலையிலும் தங்கள் கிராமத்தில் உள்ள ஏரியில் தற்போதுவரை நீர்வரத்து இல்லை என பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடைமடை ஏரியில் இறங்கி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மகேந்திரவாடி ஏரியிலிருந்து தங்கள் பகுதிக்கு வர வேண்டிய நீரைப் பெற்றுத் தரும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai automation in agriculture