புதிய வாக்காளர்கள் பதிவு மற்றும் திருத்தம் செய்ய கூடுதல் சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வரும். 1-1-2022 தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்து (31-12-2003 வரை பிறந்தவர்கள் ), விடுப்பட்டவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலை சேர்க்க ஏதுவாக சுருக்கதிருத்தம் 2022ஐ தேசிய தேர்தல்ஆணையம. அறிவித்துள்ளது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள அரக்கோணம். சோளிங்கர்,இராணிப்பேட்டை, மற்றும் ஆற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1122 வாக்குச்சாவடிகளின் 606 அமைவிடங்கள், மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் உட்பட 619 மையங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த சிறப்பு முகாம்கள் 1-11-2021 முதல் 30-11-2021 வரை அனைத்து அரசு வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களிடம் படிவங்கள் பெறும் பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் விடுமுறை நாட்களான 13,14,27, 28-11-2021 ஆகிய சனி,ஞாயிற்று கிழமைகளிலும் சிறப்பு முகாமை நடத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 13,14-11-2021 ஆகிய 2 நாட்களிலும் நடந்த சிறப்பு முகாம் தொடர்மழை காரணமாக பொதுமக்களிடம் படிவங்கள் பெறும் பணிகள் பாதிப்படைந்தது.
எனவே அவற்றை நிவர்த்தி செய்யும் விதமாக வரும் 20, 21ஆகிய தேதிகளில் கூடுதலாக சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தற்போது நடைமுறையில் உள்ள www.nvsp.in என்ற இணையதள முகவரி, VOTERHELPLINE செயலி(app) அகியவை மூலமாக சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆகவே,இந்த அரிய வாய்ப்பினை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 31-12 -2003 முன்பு பிறந்து 18வயதடைந்த இந்திய குடிமக்கள் வாக்காளர்பட்டியில் புதியதாக சேர்க்க மற்றும் திருத்தம் ,நீக்கல்,தொகுதி முகவரி மாற்றம் செய்து கொள்ள படிவங்களைப் பூர்த்தி செய்து சேவைகளைப் பெறுமாறு பொது மக்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu