ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 வழித்தடங்களில் கூடுதல் அரசு பேருந்துகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 வழித்தடங்களில் கூடுதல் அரசு பேருந்துகள்
X

காட்சி படம்

பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 வழித்தடங்களில் கூடுதலாக 14 சேவைகள் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசுகையில்,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் விதமாகவும், நெரிசலில் பயணிப்பதை தடுக்கும் விதமாகவும் பள்ளி வேலை நேரம், அவர்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் ஆகியவை குறித்து, கடந்த 3 மாதங்களாக வட்டார போக்குவரத்து அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், காவல்துறை அலுவலர்கள், அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்கள் ஆகியோரை கொண்டு பல்வேறு கட்ட களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அவ்வப்போது சூழ்நிலைக்கேற்ப ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு உட்பட 15 வழித்தடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் 30 சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம்(மே) 2ம் தேதி முதல் 8 வழித்தடங்களில் கூடுதலாக 14 சேவைகள் அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் இயக்கப்படும் விவரம்:

நேரம்: காலை 7.15, 7.30- தடம் எண்: 7B/A, வானாபாடி- முத்துக்கடை.

காலை 7.45, 8.10- தடம் எண்: 7B/B, செட்டிதாங்கல்- முத்துக்கடை.

காலை 7.35- தடம் எண்: 400சி, சோளிங்கர்- ஆற்காடு.

மாலை 4.20- தடம் எண்: 486 ஏ, அரக்கோணம்- ஆற்காடு.

காலை 7.45, 8.15- தடம் எண்: 123N, விஷாரம்- ஆற்காடு.

மாலை 4.15, 4.30- தடம் எண்:123H, விஷாரம்- ஆற்காடு.

மாலை 4.25, 6.10- தடம் எண்: T6, அரக்கோணம்- பாணாவரம்.

மாலை 3.00, 4.00- தடம் எண்: T2, அரக்கோணம்- ஆட்டுப்பாக்கம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் மாணவர்களின் படிக்கட்டு பயணத்தையும் நெரிசலையும் கட்டுப்படுத்தும் வகையில், மொத்தம் 23 வழித்தடங்களில் 54 சேவைகள் பேருந்துகள் இயக்க நடவடிக்கை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதில், அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டல பொதுமேலாளர் நடராஜன், ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், குற்றவியல் வட்டாட்சியர் விஜயகுமார், துணை மேலாளர் வணிகம் பொன்னுபாண்டி, துணை மேலாளர் (இயக்கம்) கலைச்செல்வன், திருவள்ளூர் மாவட்ட துணை மேலாளர் ரவி மற்றும் ஆற்காடு, திருத்தணி கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself