ராணிப்பேட்டையில் 80.89 சதவீத வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சித்தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் ராணிப்பேட்டையில் 80.89 சதவீதம் வாக்குப்பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜா ஆகிய 3 ஒன்றியங்களில்‌ நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஆற்காடு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 86 ஆயிரத்து 686 வாக்குகளில் 72 ஆயிரத்து 138 வாக்குகள் பதிவாகியிருந்தது. இது 83.22 சதவீதமாகும். திமிரி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 85 ஆயிரத்து 893 வாக்குகளில் 71 ஆயிரத்து 637 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 83.40 சதவீதமாகும்.

வாலாஜா ஒன்றியத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 786 வாக்குகளில் 99 ஆயிரத்து 189 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 77.62 சதவீதமாகும். இந்த 3 ஒன்றியங்களில் மொத்தமுள்ள 3 லட்சத்து 365 வாக்குகளில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 964 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 80.89 சதவீதம் ஆகும்.

வாலாஜா ஒன்றியத்தில் பதிவான வாக்குகள், வாக்குப்பெட்டிகளிள் வைத்து சீல்வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இப்பணியினை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!