இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 42603 பேருக்கு தடுப்பூசி.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 42603 பேருக்கு தடுப்பூசி.
X

ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 42603 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது .

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட உள்ள கிராமங்களில் மற்றும் நகர,பேரூர்பகுதிகளில் கொரோனாா மெகா தடுப்பூசி முகாம் நடந்தது

ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேல்விஷாரம் ஹய்ரே ஜாரியா தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் நடந்தமுகாம்களை அமைச்சர் காந்தி துவக்கிவைத்து பார்வையிட்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி தீபாசத்தியன், அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன்,ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்

பின்னர், மாவட்ட ஆட்சியர் வாலாஜா டோல்கேட்அருகே நடந்த முகாமிற்கு சென்று பார்வையிட்டார் . அங்கு வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் மருத்துவர்கள் உடனிருந்து தடுப்பேசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர் .

மேலும் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று ஆதார் எண்களைப் பெற்று தடுப்பூசி போட்டுக்கோண்டதை உறுதிப்படுத்தும் வகையில் குறித்துச்சென்றனர். மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வரும் மக்களிடையே அச்சத்தைபோக்கு விதமான பேசினர்.

மாவட்டம் முழுவதும் இரவு 7 மணி வரை நடந்த முகாமில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களான சோளிங்கரில் 6360 பேருக்கும், ஆற்காடு 6060, அரக்கோணம் 6664, காவேரிப்பாக்கம் 3150, நெமிலி 6300, திமிரி 6169 மற்றும் வாலாஜா 7900 என மாவட்டம் முழுவதும் ஒரேநாளில் 42,603 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!