உள்ளாட்சி தேர்தலில் 2,99,722 பேர் முதற்கட்டமாக வாக்களிக்க உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் 2,99,722 பேர் முதற்கட்டமாக வாக்களிக்க உள்ளனர்.
X

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக நடக்க உள்ள ஊரக உள்ளாட்சித்தேர்தலில் 299722பேர் வாக்களிக்க உள்ளதாக கலெக்டர் தகவல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி முதற்கட்ட தேர்தல் 6ந்தேதி நடக்க உள்ளது. .எனவே தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, தமிழகத்தில் இராணிப்பேட்டை மாவட்டம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிதேர்தல் 6 மற்றும் 9 தேதிகளில் என்று 2 கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது .

.அதனையொட்டி இராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் முதற்கட்டமாக ஆற்காடு, திமிரி, வாலாஜாப்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள 6 மாவட்டகவுன்சிலர்கள், 56 ஒன்றிய கவுன்சிலர்கள், 132 ஊராட்சி தலைவர்கள், மற்றும் 816 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது .

அதில் வாலாஜாவில் 36, ஆற்காட்டில் 61 பேர் மற்றும் திமிரியில்74 என 171 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் .

மீதமுள்ள பதவிகளுக்கு வாலாஜா 240, ,ஆற்காடு 187, திமிரி 226 என 653 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடக்க உள்ளது. அவற்றில் 96 கிராமங்களில் 196 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. அம்மையங்களை மத்திய அரசின் தேர்தல் நுண்கண்காணிப்பாளர்கள் வாக்குப்பதிவு மையங்கள் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி வாக்குப் பதிவு மையங்களில் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்

ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு தேர்தல் பார்வையாளர் என 7 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் .அவர்கள் தேர்தலின் போது வாக்குப் பதிவுகளை கண்காணித்து வருவார்கள்.

தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் ஒன்றியங்கள் ஆற்காட்டில் ஜிவிசி கல்வியியல் கல்லூரி, திமிரி ஆதிபராசக்தி கலைக்கல்லூரி, வாலாஜா இராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி, நெமிலி பணப்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காவேரிப்பாக்கம் ஓச்சேரி சப்தகிரி பொறியியல் கல்லூரி, மற்றும் சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகியவை வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றார்.

முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் பணிகளில் ஊழியர்கள் முறையே திமிரி 1880, ஆற்காடு1526, மற்றும் வாலாஜா ஒன்றியத்தில்1887 பேர் என மொத்தம் 5293 பேர் தேர்தல் பணியாளர்களாகவும் பாதுகாப்பு பணிகளில் 1861 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முதற்கட்டவாக்குப்பதிவில் பொதுமக்கள் 299722 பேரும், இரண்டாம் கட்ட தேர்தலில் 367515 பேரும் என மொத்தமாக 667237 பேர் இராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் என்றார்.

தேர்தலில் கொரோனா பாதுகாப்பு விதிகள் பின்பற்றி முகக்கவசம் அணிதல் கையுறை அணிதல், கிருமி நாசினி தெளித்து சமூக இடை வெளியை கடைபிடித்து வாக்களிக்க வைத்தல்,போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பாதுகாப்பு உபகரனங்களை பயன்படுத்தி பணியாற்ற உள்ளனர். அதற்கான பொருட்கள் அனைத்தும் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தேர்தலில் பயன்படுத்திய கொரோனா பாதுகாப்பு பொருட்களை அப்படியே தூக்கி எறியாமல் இருக்க தனியாக குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு சேகரிக்கப்படும்.

தேர்தலுக்கு பின்பு தனிவாகனத்தில் கொண்டுச்சென்று அவை பாதுகாப்புடன் அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சந்திப்பின்போது திட்ட இயக்குநர் ஊரக முகமை லோகநாயகி உடனருந்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil