மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 22088 பேருக்கு தடுப்பூசி

மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 22088 பேருக்கு தடுப்பூசி
X

தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்த கலெக்டர்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 22088பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது..

அதில் அரசு உத்தரவின்பேரில் கடந்தமாதம் 12ம் தேதிமுதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாவட்டத்தில் உள்ள அனைத்துநகராட்சிகள், பேரூராட்சிகள்,மற்றும் ஊராட்சிகளில் 550 தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணிக்கு தொடங்கியது.

முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் மக்களுக்கு இரத்தழுத்தம், சர்க்கரைநோய் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர் ஆலோசனைக்கு பின்பு தடுப்பூசி போடப்பட்டது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4ஆம்கட்டமாக காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடந்த 550 கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் 22088பேர் கொரோனாதடுப்பூசி போட்டுக்கொண்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்

Tags

Next Story
why is ai important to the future