மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 17183 பேருக்கு. தடுப்பூசி போடப்பட்டது
தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன்
தமிழகம் முழுவதும் மாநிலஅரசு கடந்தமாதம் 12ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா கொரோனா தடுப்பேசி முகாம் என்று அதிக அளவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி நடத்திவருகிறது..
அதன்அடிப்படையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 12 சுகாதார வட்டாரங்களுக்குட்பட்ட இடங்களில் 5வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாம் நடந்த இடங்களுக்கு இராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியத்தை விளக்கினார்
அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டுதான் இது போன்ற முகாம்களை அமைத்து தடுப்பூசி போடும்பணியில் தீவிரம் காட்டுகிறது . நம்மைப் பாதுகாக்கவும் நாம் பலரைப் பாதுகாத்திடவும. தடுப்பூசி அவசியம் என்று கூறினார்.
முகாமில் கோவிசீல்டு தடுப்பூசி முதல் டோஸை 7609 பேரும், 2வது டோஸை 6041பேரும் போட்டுக்கொண்டனர். அதேபோல கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸை 2186 பேரும் 2வது டோஸை 1359 பேரும் போட்டுக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu