உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 1700 போலீசார்: எஸ்பி தீபாசத்தியன்
இராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்தியன்
தமிழகத்தில் இராணிப்பேட்டை மாவட்டம் உட்பட 9மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும. 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது
அதில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் மாவட்ட உறுப்பினர், ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 2648 பதவிகளுக்கு 486 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மீதமுள்ள 2162 பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது.
அதில், வாலாஜாப்பேட்டை, திமிரி மற்றும் ஆற்காடு ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள 1001 பதவிகளுக்கு முதற்கட்டமாக வரும் 6தேதி தேர்தல் நடக்கிறது. ,
அதனைத் தொடர்ந்து. அரக்கோணம் சோளிங்கர் காவேரிபாக்கம் மற்றும் நெமிலி ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள 1161 பதவிகளுக்கு 2ஆம் கட்டமாக வரும் 9ம் தேதி நடக்க உள்ளது
பின்னர், வாக்குப்பெட்டிகள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வைக்கப்பட்டு 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. அதற்கான தேர்தல் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக எடுத்து வருகிறது.
இந்நிலையில் தேர்தல் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வண்ணம் அமைதியாக நடக்க மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபாசத்தியன் தலைமையில் நடந்து வருகிறது.
இதுகுறித்து எஸ்பி தீபா சத்தியன் தெரிவித்திருப்பதாவது; இராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தலையொட்டி 1 ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிகள், 22 இன்ஸ்பெக்டர்கள், 120 சப்இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1700 போலீசார்களைக் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கலாம். காவல்துறையினர் பல இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தி உள்ளனர். எனவே ஓட்டுப்பதிவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அல்லது பிரச்சினையில் ஈடுபடுபவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu