செழுமைக்கோடு பற்றி பேசுவது ம.நீ.ம - கமல்ஹாசன்

செழுமைக்கோடு பற்றி பேசுவது ம.நீ.ம - கமல்ஹாசன்
X

நாடே வறுமைக்கோட்டை பற்றி பேசும் போது செழுமைக்கோட்டை பற்றி பேசுவது மக்கள் நீதி மய்யம் மட்டும் தான் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை, ஆற்காடு பேருந்து நிலையங்களில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், என்னை சினிமாக்காரனின் குரல் என சிலர் விமர்சிக்கிறார்கள், ஆனால் நான் தமிழன், ஒவ்வொருவர் வீட்டிலும் எரியும் விளக்கு எனவும் பேசினார்.மழை,வெயில் பாராமல் மாற்றத்திற்காக காத்திருக்கும் மக்களின் கர்ஜனை எனக்கு கேட்கிறது.மக்கள் நீதி மையத்தின் திட்டமான இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை உச்சநீதிமன்றம் பாராட்டியிருக்கிறது எனவும், தற்போது சாதி, மத பேதமில்லாமல் நான் 40 வருடங்களாக வளர்த்த இயக்கம் கட்சியாகி இருக்கிறது என பேசினார். நாடே வறுமைக்கோட்டை பற்றி பேசும் நிலையில் அதனை விடுத்து செழுமைக்கோட்டை பற்றி பேசுவது மக்கள் நீதி மய்யம் தான் என கூறியதோடு, தமிழகத்தை 1 டிரில்லியன் எக்கானமியாக மாற்ற முயற்சி செய்வதாக கூறினார்.

Tags

Next Story
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!