சுத்திகரிக்காத கழிவுநீரை ஆந்திராவுக்கு எடுத்து செல்ல முயன்ற லாரி பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து சுத்திகரிப்பு செய்யாத கழிவுநீரை ஆந்திராவிற்கு எடுத்துச் செல்ல முயன்ற லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருந்துகள் தயாரிக்கும் தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து முறையாக சுத்திகரிப்பு செய்யாத ரசாயன கழிவு நீர் முறைகேடாக லாரி மூலம் ஏற்றி செல்லப்படுவதாக சார் ஆட்சியர் இளம்பகவத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வருவாய்த்துறையினர் திருவலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் முறையான சுத்திகரிப்பு செய்யாத ரசாயன கழிவு நீர் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக லாரியை பறிமுதல் செய்த வருவாய் துறையினர் சிப்காட் காவல் நிலையத்தில் லாரியை ஒப்படைத்ததோடு லாரியில் இருந்த கழிவுநீரை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதேபோல் பல ஆண்டுகளாக தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story