ரஜினி பிறந்த நாள் : இலவச போக்குவரத்து பேருந்து சேவை ஏற்பாடு செய்த ரசிகர்கள்

ரஜினி பிறந்த நாள் : இலவச போக்குவரத்து பேருந்து சேவை ஏற்பாடு செய்த  ரசிகர்கள்
X
ரஜினி பிறந்த நாள் இலவச போக்குவரத்து பேருந்து சேவை

ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு இலவச பேருந்து, ஆட்டோ சேவைகளை ஆற்காடு ரஜினி மக்கள் மன்றத்தினர் துவக்கியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து மற்றும் ஆட்டோ சேவையை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.ஆற்காடு பேருந்து நிலையத்தில் ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாட்டமானது ராணிப்பேட்டை மாவட்ட ஆற்காடு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆற்காட்டிலிருந்து கலவை வரை செல்லக்கூடிய தனியார் பேருந்துக்கும், பல்வேறு பகுதிகளுக்கு செல்ல கூடிய ஆட்டோக்களுக்கு மொத்தமாக கட்டணத்தை செலுத்தி இலவசாக சேவையாக பொதுமக்களுக்கு வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சோளிங்கர் ரவி துவக்கி வைத்தார். முன்னதாக சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கூட்டு பிரார்த்தனையில் சோளிங்கர் ரஜினி மக்கள் மன்றத்தினர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.

Tags

Next Story
ai solutions for small business