ரம்ஜான் பண்டிகை: 2 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

பைல் படம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை ஆட்டுச் சந்தை நடப்பது வழக்கம். அதன்படி இந்தச் சந்தைக்கு குன்னத்தூர், எறையூர், தியாகதுருகம், சேந்தநாடு, ஆசனூர், களமருதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், வரும் சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், ஆடுகள் விற்பனை களைகட்டி உள்ளது. காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திருச்சி, சேலம், பெங்களூரு, கடலூர்,தேனி, கம்பம் மற்றும் பல பகுதிகளிலிருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
பின்பு ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் சந்தை தொடங்கி 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu