இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்களுக்கு வரவேற்பு

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்களுக்கு வரவேற்பு
X

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள்.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவர்களுக்கு திருவாடானையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை அடுத்த நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் நாட்டு படகு ஒன்றில் கச்சத்தீவு அருகே கடந்த பிப்ரவரி 18-ம் தேதி மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்த 6 மீனவர்களை கைது செய்து அவர்கள் சென்ற படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையிலிருந்து நம்புதாளை மீனவர்கள் 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்களில் 2 மீனவர்களுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முத்துக்குமார், கம்மாக்கரை, மனோஜ்குமார், ரகுபதி ஆகிய 4 மீனவர்கள் மட்டும் தமிழகம் வந்துள்ளனர்.

இதேபோல், இராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் கடந்த 26-2-2022 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நம்புதாளை மீனவர்கள் 4 பேர், இராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் என மொத்தம் 12 மீனவர்கள் நேற்று மாலை 4 மணியளவில் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கு மீன்வளத்துறை அதிகாரிகள் சால்வை அணிவித்து மீனவர்களை வரவேற்றனர். அதன்பிறகு 12 மீனவர்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!