1971 போரில் கலந்து கொண்ட வீரர்களின் வீடுகளுக்கு சென்ற வெற்றி சுடர்
ராணுவவீரரின் வீட்டுக்கு வந்த வெற்றி சுடர்
இந்தியா பாகிஸ்தான் நாடுகளிடையே கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. போரில் வெற்றி பெற்று 50ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக கடந்தாண்டு டிசம்பர் 16ம் தேதி பிரதமர் மோடி வெற்றி ஜோதியை ஏற்றி வைத்தார். நாட்டின் வெற்றிக்காக பாடுபட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஏற்றப்பட்ட நினைவு சுடர் போரில் கலந்து கொண்ட வீரர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டபொம்மன் கடற்படை தளத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கடற்படை தளத்திற்கு நேற்று நினைவுச்சுடர் வந்தது. தொடர்ந்து அன்றைய போரில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ராமசாமி மற்றும் வசந்தவேணி நாச்சியார் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராமையா ஆகியோர் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற ராணு வீரர்களின் குடும்பத்தினர் வெற்றிசுடருக்கு மலர் தூவி, வணங்கி மரியாதை செலுத்தினர். நாளை காலை இந்திய எல்லையான தனுஷ்கோடி, மற்றும் ராமேஸ்வரம், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணி மண்டபத்தற்கும் கொண்டு செல்லப்பட உள்ளது. 16ம் தேதி மாலை உச்சிப்புளியிலிருந்து மதுரை எடுத்துச் செல்ல உள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu