உப்பூரில் அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து - போலீசார் விசாரணை

உப்பூரில் அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து - போலீசார் விசாரணை
X

உப்பூரில் அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து, விபத்தில் சேதமடைந்த வேன்.

உப்பூரில் அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து, சிறுவன் உள்பட 4 பேர் காயம். போலீசார் விசாரணை.

உப்பூரில் அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து. சிறுவன் உள்பட 4 பேர் காயம்.போலீசார் விசாரணை.

திருவாடானை தாலுகா தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நம்புதாளையை சேர்ந்த கருமலை, நதியா, ராமலிங்கம், 10 வயது சிறுவன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வேனில் சித்தார்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றனர். உப்பூர் கோவில் முன்பு முன்னாள் சென்ற பேருந்தை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் பேருந்து மீது மோதியது. இதில் நால்வருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மற்றவர்கள் எவ்வித ரத்தக் காயமும் இன்றிதப்பினர். காயமடைந்தவர்கள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் விரைந்து வந்து அவர்களுக்கு உதவினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருப்பாலைக்குடி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products