நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
நிறுதப்பட்ட போக்குவரத்தை மீண்டும் இயக்க கோரி 4 கிராம மக்கள் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா உள்பட்ட நெடுமரம், அந்திவயல், அறிவித்தி, அறநூற்றிவயல் ஆகிய நான்கு கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்கள் வழியாக தினசரி செல்லும் திருச்சி - இராமேஸ்வரம் பேருந்துகள் கடந்த இரண்டு மாதங்களாக சாலை வசதி சரியில்லை என கூறி நிறுத்தப்பட்டது. இதனால் வெளியூர்களுக்குச் சென்று வர முடியாமல் கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் கிராம மக்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் திரண்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதுதொடர்பாக 4 கிராம மக்கள் கூறுகையில் திருச்சி முதல் ராமேஸ்வரம் செல்லும் பேருந்து நான்கு கிராமங்களின் வழியாக சென்று வந்தன. கிராமங்களில் சாலை சரியில்லை எனக்கூறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் வயதானவர்கள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கிராமங்கள் வழியாக மீண்டும் போக்குவரத்து இயக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சரி செய்து தருவதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu