தொண்டி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது: 2 கிலோ கஞ்சா பறிமுதல்

தொண்டி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது: 2 கிலோ  கஞ்சா பறிமுதல்
X

கஞ்சா கடத்தியதாக இருவரை கைது செய்த போலீசார்.

தொண்டி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இருவரை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சா மீட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை சோழியகுடி பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் தொண்டி காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீஸார் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர் அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற இருவரை போலீஸார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் சோழியக்குடியைச் சேர்ந்த தண்டாயுதபாணி மகன் பாலமுருகன் (29), முத்துகுமாரசாமி மகன் வடிவேல் (45) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்