பல்வேறு காேரிக்கைளை வலியுறுத்தி இரயில் நிலையம் முன் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு காேரிக்கைளை வலியுறுத்தி இரயில் நிலையம் முன் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரயில் பெட்டிகளை மீண்டும் சேர்க்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரயில் பெட்டிகளை மீண்டும் சேர்க்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.

இராமநாதபுரம் இரயில் நிலையம் முன்பாக ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரயில் பெட்டிகளை அகற்றியதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். புதுச்சேரி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் மானியம் வழங்குவது போல அனைத்து மாநிலங்களிலும் வழங்க வேண்டும்.

ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மின்தூக்கி நகரும் படிக்கட்டுகளை இயக்க வேண்டும் என்பன பாேன்ற காேரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் இராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு ரயில்வே நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் எதிராக பல்வேறு கன்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..