பேருந்து நிலையத்தில் பைக் நிறுத்தம்- போக்குவரத்து இடையூறு

பேருந்து நிலையத்தில் பைக் நிறுத்தம்- போக்குவரத்து இடையூறு
X

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் சேதுபதி பேருந்து நிலையத்திற்குள் மோட்டார்பைக்குகளை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

ஆர்எஸ்மங்கலம் சேதுபதி பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. போதிய கண்காணிப்பு இல்லாத காரணத்தினால் பஸ்ஸ்டாண்ட் வளாகத்திற்குள் மோட்டார்பைக்குகளை இடையூறாக உள்ளே நிறுத்தி வருவதாகவும் அதனால் பஸ்கள் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் சிரமம் ஏற்படுகிறது.

இது போக நான்கு சக்கர வாகனங்களும் உள்ளே வந்து செல்கின்றன. இவற்றைக் கண்காணித்து பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே வாகனங்கள் நிறுத்தும் நபர்கள் மீது பேரூராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!