தொண்டி அருகே தடை செய்யப்பட்ட பான்மசாலா புகையிலை விற்றவர் கைது

தொண்டி அருகே தடை செய்யப்பட்ட பான்மசாலா புகையிலை விற்றவர் கைது
X
பைல் படம்
தொண்டி அருகே தடை செய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்; அவரிடம், 70 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூர் பகுதியில், பல்வேறு கடைகளுக்கு, அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற தொண்டி போலீசார் கடைகளில் விநியோகம் செய்துகொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் புளியாலை சேர்ந்த ராமு மகன் சுப்பையா 38 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 19 புகையிலை பொட்டலங்கள் 15 கூலிப் பொட்டலங்கள் 13 குட்கா பொட்டலங்கள் என 70 கிலோ பொட்டலங்களையும் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் சுப்பையாவை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story