திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திருவாடானை அருகே உலக புகழ்பெற்ற திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூரில் உலக பிரசித்திப் பெற்ற திருத்தலம், கலியுகத்தின் கண்கண்ட தெய்வம், அனைத்து மதத்தாரும் வணங்கும் அபிபக்த நாயகி. பக்தர்களின் பிணி தீர்க்கும் பழம்புற்று நாதர் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயிலில் சித்திரை திருவிழா இன்று காலை 8:35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 : 35 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நாளை 8ம் தேதியும் மூண்றாம் திருநாளான 9ம் தேதியும் கேடகமும், பஞ்ச மூர்த்தி புறப்பாடும் இரவு நடைபெற உள்ளது.
நான்காம் திருநாளான 10ம் தேதி பூதம் அன்ன வாகனத்தில் இரவு சுவாமி புறப்பாடும். 5ம் திருநாளான 11ம் தேதி இரவு 9 மணிக்கு திருக்கல்யாணமும், 6ம் நாளான 12 ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் ஏழாம் திருநாளான 13ம் தேதி நந்தி சிம்ம வாகனத்திலும் எட்டாம் திருநாளான 14 ம் தேதி வெட்டும் குதிரை காமதேனு வாகனத்திலும் ஒன்பதாம் திருநாளான 15ம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டமும் விழாவின் கடைசி நாளான பத்தாம் திருநாள் 16ம் தேதி காலை 10:35 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்வும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பாகம்பிரியாள் அம்மனும் வல்மீகநாதர் சுவாமியும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், ஸ்தானிகம் மணிகண்ட குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளதால் திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ உத்தரவின்பேரில் தொண்டி காவல் ஆய்வாளர் முருகேசன், திருவாடானை காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமையில் காவல் சார்பு ஆய்வாளர்கள் மாரி, விஜயபிரபாகரன், பூமிநாதன், காசி, சுதர்சன் உட்பட போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu