தொண்டி அருகே கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்

தொண்டி அருகே கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்
X
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் இருந்து நேற்று மீனவர்கள் பொன்னையா, மணிகண்டன், மாரிச்செல்வம், மணிகண்டன், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தன் மற்றும் பெங்களுரைச் சேர்ந்த முனியராஜ் உள்பட 6 பேர் நேற்று மாலை 4 மணி அளவில் கடலில் சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் பொன்னையா கடலில் தவறி விழுந்து விட்டதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, எனவும் படகில் சென்ற நபர்கள் கரைக்கு வந்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திருவாடானை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர், இரவில் கடலில் மாயமான பொன்னையா வை தேடும் பணியில் தீவரமாக ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை பொன்னையா உடல் கரை ஒதுங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டி காவல் ஆய்வாளர் ஆனந்த குமார் போலீஸார் மற்றும் கடலோர காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவாடானை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொண்டி போலீஸார் மற்றும் கடலோர காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!