திருவாடானை தீயணைப்பு நிலையத்துக்கு சாலை வசதி செய்யப்படுமா?
திருவாடானை தீயணைப்பு நிலையத்துக்கு சாலை வசதி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
திருவாடானை அருகே புதிதாக திறக்கப்பட்ட தீயணைப்பு நிலையம். சாலை வசதி இல்லாததாதல் தீயணைப்பு வாகனம் செல்லமுடியாத அவலம் நீடிக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் பல ஆண்டுகளாக தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் தமிழக அரசால் கடந்த 2019ம் ஆண்டு ரூ.70.81 லட்சம் செலவில், சின்னகீரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது.
மேலும், புதிய தீயணைப்பு மீட்பு நிலையம் கட்டி முடிக்கப்பட்டு சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் பயன்படுத்த இயலவில்லை. எனவே சாலை அமைத்து விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், மாவட்ட தீயணைப்புதுறை அலுவலர் ராஜு, ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார். நிலைய அலுவலர், வீரபாண்டி உட்பட தீயணைப்பு துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திறக்கப்பட்ட இந்த புதிய கட்டிடத்திற்கு உள்ளே வரும், பாதை மிகுந்த மோசமாக உள்ளது. மேலும், மழை காலங்களில் பாதையில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால் தீயணைப்பு வாகனத்தை அவசர காலத்தில் எளிதில் எடுத்துச் செல்ல முடியாத அவல நிலை உள்ளது. எனவே, சாலை அமைக்கப்படாமல் தீயணைப்பு நிலைய புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து, எவ்வித பயனுமில்லை. எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தீயணைப்பு வாகனம் எளிதில் சென்று வர புதிய கட்டிடத்தை சுற்றி, தரமான சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu