வீட்டின் பூட்டை உடைத்து டிவியை கொள்ளையடித்த திருடர்கள்

வீட்டின் பூட்டை உடைத்து டிவியை கொள்ளையடித்த திருடர்கள்
X
திருவாடானை அருகே பள்ளித் தலைமை ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 இன்ச் LED டிவி கொள்ளை.

திருவாடானை அருகே பள்ளித் தலைமை ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 இன்ச் LED டிவியை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்தவர் அருள் ஜெயராஜ் இவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவதன்று அருள் ஜெயராஜ் பணிக்கு சென்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். அங்கு பணம் நகை ஏதும் கிடைக்காததால் வீட்டில் இருந்த 40 இன்ச் எல்இடி டிவியை திருடிச் சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த அருள் ஜெயராஜ் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் விசாரனை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவாடானை போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture