ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் விஷம் அருந்தியதால் பரபரப்பு

ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் விஷம் அருந்தியதால் பரபரப்பு
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்த கேர்லின்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ராஜீவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கேர்லின் என்ற பெண். இவருக்கும் இவரின் சகோதரர் சேவியர் என்பவருக்கும் குடும்ப சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேர்லின் மனு கொடுக்க வந்தார். அப்போது தேர்தல் விதிமுறை இருப்பதால் வழங்கப்படவில்லை. இதனால் வெகு நேரமாக மனு அளிக்க வந்த பெண் திடீரென விஷம் அருந்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மீட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!