குளிக்கச் சென்ற தந்தை மகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

குளிக்கச் சென்ற தந்தை மகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X
திருவாடானை அருகே நிலமகிழ மங்கலத்தில் குளிக்கச் சென்ற தந்தை மகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.

திருவாடானை தாலுகா நிலமகிழ மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் மகன் ஜோதிமணி (39) இவர் கோயம்புத்தூர் பகுதியில் நூற்பாலையில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தற்போது தேர்தலில் வாக்களிக்க விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஊரணியில் மதியம் குளிக்க சென்றபோது தனது (4) வயது மகள் யாசினியையும் அழைத்துச் சென்றவர். மகளை கரையில் உட்கார வைத்து குளித்தவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராத நிலையில் 4 வயது குழந்தை தந்தையை காணவில்லை எனத் தேடி தானும் குளத்திற்குள் இரங்கி உள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் நீரில் முழ்கி மூச்சு தினறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரது உடலையும் மீட்டு எஸ்.பி பட்டிணம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் வந்த போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக திருவாடனை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 4 வயதான யாசினிக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை மகள் குளிக்கச் சென்ற இடத்தில் இருவரும் ஊரணி நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மனைவியும் ஆண் குழந்தையும் கதறி அழுத காட்சி காண்போரை பதற வைத்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!