விமரிசையாக நடந்த வேலாங்குளம் அரிய நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீ அரிய நாச்சியம்மன் கோவில் கும்பத்திற்கு சிவாச்சாரியர்கள் மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே நாரணமங்கலம் பஞ்சாயத்து வேலாங்குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அரிய நாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம், இன்று நடைபெற்றது.
முதல்நாள் நிகழ்ச்சியாக 14ம் தேதி மாலையில் மங்கல இசையுடன், பூஜைகள் தொடங்கின. அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், பிரவேச பலி, ம்ருத் சங்கீரஹணம் ரக்ஷா பந்தனம், யாகசாலை, பிரவேசம் கட ஸ்தாபனம், தேவதா ஆவாஹனம் முதல் கால வேத பாராயணம், மற்றும் ஹோமங்கள் பூர்ணாஹீதீ அஷ்டாவதானம் தீபாரதனை மருந்து சாற்றுதல் ஏஜமானர் மரியாதையுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
அடுத்து, 15ம் தேதி காலை சுப்ரபாதம், கோ பூஜை, சூர்ய நமஸ்காரம், கலா ஆவாஹணம் நேத்ரோன்மீலனம், இரண்டாம் கால வேத பாராயணம், ஹோமங்கள் நாடி சந்தானம் மகா பூர்ணாஹுதி யாத்ரா தானம் பூஜைகள் நடத்தப்பட்டு கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து, பின்னர் ஸ்ரீ அரிய நாச்சியம்மன் விமான கலச மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து மூலவர் அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை வேலாங்குளம் எம்.கருப்பையா நாட்டாமை வகையாராக்கள் குடும்பத்தினர், பஞ்சாயத்து தலைவர் காளிமுத்து மற்றும் கிராமபொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களுக்கு அம்மனின் அருள் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu