கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்
X

திருவாடானை அருகே கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டம்.

கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட விருச்சுழி ஆற்றில் கடந்த 21ம் தேதி மணல் திருட்டை தடுக்க சென்ற கட்டவிளாகம் கிராம உதவியாளர் சுரேஷ் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலைவெறி தாக்குதல் நடத்திய மணல் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தாக்குதல் நடத்திய மணல் திருட்டுக் கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் இன்று காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்