இராமநாதபுரம் அருகே குடும்பத் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது

இராமநாதபுரம் அருகே குடும்பத் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
X
இராமநாதபுரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு. 3 பேர் கைது.

இராமநாதபுரம் அருகே லாந்தை கண்ணந்தை கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார், 30. இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி தெய்வானை. இவர்களது மகன் செந்தில்குமார் வெளிநாட்டில் வேலை செய்த வந்த இவர் சமீபத்தில் ஊர் திரும்பினார்.

சரத்குமார், முனியசாமி குடும்பம் இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் ரோமன் சர்ச் பெட்ரோல் பங்க் அருகே சரத்குமார் இன்று காலை நின்றார். அப்போது அங்கு வந்த முனியசாமி, தெய்வானை, செந்தில்குமார் ஆகியோர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரத்குமாரை வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்..

படுகாயமடைந்த சரத்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரத்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய செந்தில்குமார், முனியசாமி, தெய்வானை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!