திருவாடானை பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நாற்று நட்டு விவசாயம்

திருவாடானை பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நாற்று நட்டு விவசாயம்
X

கோப்பு படம் 

விவசாயிகள் நாற்று நட்டு அதன் மூலம் நாற்று நடவு செய்வதை கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்வமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிகளில் கடந்த காலங்களில் விதைத்து பயிரிட்டு வந்த நிலையில் தற்போது விதைப்பதற்கு முன்பாகவே கனமழை பெய்து வரும் காரணமாக ஆங்காங்கே வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விதைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்த நிலையில் விதைப்பு காலமும் கடந்துவிட்டது.

ஒரு சில பெரு விவசாயிகள் நாற்று நட்டு அதன் மூலம் நாற்று நடவு செய்வதை கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது ஆர்வமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அப்படி இன்று வடக்கூர் கிராமத்தை சேர்த்த ஏகாம்பரம் என்பவருக்கு சொந்தமான விவசாய வயலில் பெண்கள் ஆண்கள் 80 பேர் பணியில் இருந்தனர். ஆண்கள் நாற்றை பிடிங்க பெண்கள் நாற்று நட்டனர்.

இந்த காட்சியை கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்ப்பது பிரம்மிப்பாக இருந்தது. குறுகியகால பயிராக இருப்பதாலும், அதிக மழை பெய்ததால் விதைக்க முடியாததால் நாற்று நடப்பட்டது. அவ்வாறு நாற்று நடும் பெண்கள் தங்களின் பணியில் சோர்வு அடையாமல் இருக்க கிராமத்து பாடல் பாடியும், குலவை போட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story