தேவிப்பட்டிணத்தில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

தேவிப்பட்டிணத்தில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
X
கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல். மெரைன் போலீசார் நடவடிக்கை

தேவிபட்டிணத்தில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்து நடவடிக்கை.

இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணத்தில் உள்ள தனியார் குடோனில், படகுகளில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தேவிபட்டிணம் கடலோர காவல் நிலையம் அருகே உள்ள குடோனில் 250 கிலோ எடை கொண்ட உயிருடன் கடன் அட்டையை மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்தனர்.

இராமநாதபுரம் உதவி வன காப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வன பாதுகாப்பு படை வனக்காப்பாளர் அடங்கிய குழுவினர் குடோனில் நோட்டமிட்டு இறந்த நிலையில் உயிருடன் இருந்த கடல் அட்டையை பறிமுதல் செய்து இராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு வேனில் கொண்டு சென்றனர். ஆனால், கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, இராமநாதபுரம் மாவட்ட வனச்சரக வனச்சரக அலுவலகத்தினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil