விறுச்சுளி மணிமுத்தாறு ஓடையில் மணல் கொள்ளை என பொதுமக்கள் புகார்

விறுச்சுளி மணிமுத்தாறு ஓடையில் மணல் கொள்ளை என பொதுமக்கள் புகார்
X

மணல் அள்ளப்பட்டுள்ள இடம் 

திருவாடானை அருகே விறுச்சுளி மணிமுத்தாறு ஓடையில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கீழக்கோட்டை மணிமுத்தாறு விறுச்சுளி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவதற்கு அரசு தடை விதித்திருந்தது. தற்போது மணல் விலையும் அதிகரித்துள்ள நிலையில் மணல் திருட்டில் ஈடுபடுவோர் அதிகரித்துள்ளனர்.
செக்குடி, கவலை வெண்றான் எல்கையில் மணிமுத்தாறு விளிச்சுளி கிளை நீர்ப்பாசன ஓடையில் நீர் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. அப்பகுதியில் சட்ட விரோதமாக கனரக இயந்திரங்கள் மூலம் அதிக அளவில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து யாரேனும் கேட்டால், கொலை மிரட்டல் விடுவதாகவும் நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை ரூ.1கோடி மதிப்பிலான சுமார் 1 டன் மணல் கடத்தப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அதிகாரிகளும் கிராம நிர்வாக அலுவலர்களும் புகாரை ஏற்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!