சம்பளம் பாக்கி வழங்கவில்லை : கூட்டுறவு கடன் வங்கிக்கு ஜப்தி நடவடிக்கை

சம்பளம் பாக்கி வழங்கவில்லை : கூட்டுறவு கடன் வங்கிக்கு ஜப்தி நடவடிக்கை
X
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் செயலாளருக்கு சம்பளம் பாக்கி வழங்காததால் ஜப்தி நடவடிக்கை.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் செயலாளருக்கு சம்பளம் பாக்கி வழங்காததால் ஜப்தி நடவடிக்கை.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தெற்கு தெருவை சேர்ந்த வெங்கட்ராம செட்டியார் மகன் சுப்பையா (68). இவர் ஓரியூரில் உள்ள 629 எண் சிறுகம்பையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலளாளராக 1977ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றி வந்த காலத்தில் 4 1/2 ஆண்டுகள் அவருக்கு மாத ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர் ஓய்வு பெற்றுள்ளார்.தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியான 2 லட்சத்து 70 ஆயிரத்தை தருமாறு பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அவர் மதுரையில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கி தொகையை சங்க தலைவர் மகாலிங்கம் தராமல் ஏமாற்றி தன்னை பெறும் மன உளைச்சலுக்கு தள்ளிவிட்டதாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கு முடிந்து சம்பள பாக்கியை வட்டியுடன் ரூ 13 லட்சத்து 70 ஆயிரத்தை வழங்க மகாலிங்கத்திற்கு தொழிலாளர்கள் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை வழங்காத நிலையில் இன்று சிறுகம்பையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு. திருவாடானை நீதிமன்றத்திற்கு உத்தரவு அனுப்பியது. அதனடிப்படையில் நீதிமன்ற ஊழியர் மணிகண்டன் இன்று சங்கத்தின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய வந்தார். அவர் வருவதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட சங்க தலைவர் மகாலிங்கம் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனால் ஜப்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது இதனையடுத்து அதிகாரிகள் வேறு நாட்களில் ஜப்தி செய்ய வருவதாகவும் அப்போதும் அலுவலகம் பூட்டிய நிலையில் இருந்தால் நீதிமன்ற அனுமதியோடு பூட்டை உடைத்து பொருட்களை ஜப்தி செய்யப்படும் எனக் கூறிவிட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!