வியாபாரியிடம் ரூ.65 ஆயிரம் லஞ்சம்: நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் கைது

வியாபாரியிடம் ரூ.65 ஆயிரம் லஞ்சம்: நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் கைது
X

திருவாடானை அருகே நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கிய நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் ராம்ராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருவாடானை அருகே நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கிய நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் கைது.

நெல் கொள்முதல்: லஞ்சம் வாங்கிய நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் ராம்ராஜ் கைது.

இராமநாதபுரம் திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய கூடுதலாக பணம் கேட்பதாக தொடர்ந்து புகார் வந்தது.

இந்நிலையில் வியாபாரி கணேசன் கொடுத்த புகாரின் பேரில் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உண்ணி கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் ஆகியோர் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் ராம்ராஜை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் அவரிடமிருந்து ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ராம்ராஜிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்