இராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது.
X
இராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது. வழிப்பறிக்கு பயன்படுத்திய வாள் பறிமுதல்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு அவர் பயன்படுத்திய வாள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வள்ளல் பாரி தெருவைச் சேர்ந்த விஜயமாடசாமி என்பவரை தாக்கி காயப்படுத்தி விட்டு, அவரிடம் இருந்து ரூபாய் 30 ஆயிரத்தை பறித்து சென்று விட்டாராம். அவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. காமாட்சியை போலீசார் தேடி வந்த. நிலையில், வீட்டின் அருகில் பதுங்கியிருந்த காமாட்சியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அப்போது அவரை சோதனையிட்டபோது நீண்ட வாள் போன்ற ஆயுதம் வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த கேணிக்கரை போலீசார் காமாட்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai future project