திருவாடானை அரசு மருத்துவமனையிலுள்ள கருவிகளை எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு
திருவாடனை அரசு மருத்துவமனை பொருட்களை வேறு மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு.
திருவாடனையில் தாலுகா அரசு மருத்துவமனை உள்ளது. தினமும் 400 -க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் 20க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். இந்த மருத்துமனையில் நாற்பத்தி எட்டு உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் அளவில் படுக்கைகள் உள்ளன.
கடந்த ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் சுமார் ரூ. 35 லட்சம் செலவில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்ட சில கருவிகள் இன்னமும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், ஏற்கெனவே பல மருத்துவ உபகரணங்கள் பரமக்குடி மருத்துமனைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் திருவாடானை மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கில் உள்ள உபகரணங்களை கழற்றி பரமக்குடி மருந்துவமனைக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், அதற்காக ஏற்பாடுகள் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதிகளான ஒன்றிய கவுன்சிலர் சாந்தி செங்கைராஜன், ஊராட்சி தலைவர் இலக்கியாராமு, துணைத்தலைவர் மகாலிங்கம் ஆகியோர் நேரில் சென்று பர்வையிட்டனர்.
அதனை தொடர்ந்து தகவலறிந்த தி.முக ஒன்றிய செயலாளர் சரவணன், நகர செயலாளர் பாலா, அறிவழகன், திமுக பிரமுகம் கண்ணன் உள்ளிட்டோர் நேரில் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு மருத்துவர் எட்வின் ஆகியோரிடம் கேட்டு அறுவை சிகிச்சை அரங்கம், பல் மருத்துவ உபகரணங்கள், எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டனர். அதன்பிறகே பரபரப்பு அடங்கியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu