இராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட பறவைகளை வேட்டையாடிய மூவர் கைது

இராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட பறவைகளை வேட்டையாடிய மூவர் கைது
X

இராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட மூவருடன் வனத்துறை அதிகாரிகள் உள்ளனர்.

இராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட பறவைகளை வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே பறவைகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இராமநாதபுரம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் ராஜசேகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது சுமார் அரசால் தடை செய்யப்பட்ட 23பறவைகளை வேட்டையாடிய சித்தார்கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், அப்துல் சத்தார், புகாரி அஹ்மத் அலி ஆகியோரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட அபூர்வ பறவைகள் 23, மற்றும் வேட்டையாடுவதற்கு அவர்கள் வைத்திருந்த ஏர்கன், மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!