திருவாடானை அருகே பதினெட்டாம் படி கருப்பர் கோவில் மகாகும்பாபிஷேகம்

திருவாடானை அருகே பதினெட்டாம் படி கருப்பர் கோவில் மகாகும்பாபிஷேகம்
X

திருவாடானை அருகே பதினெட்டாம் படி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவாடானை அருகே பழையனக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர், ஸ்ரீகாளியம்மன்,ஆலயமகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பழையனகோட்டை கிராமத்தில் அமைத்துள்ள பதினெட்டாம்படி கருப்பர், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபால்வளகாரி அம்மன். ஸ்ரீ முன்னோடி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக திருவாடானை வைரமணி சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலையில் கலசத்தில் புனிதநீர் வைத்து பூஜைகள் செய்து பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து கருட பகவான் வட்டமிட புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்துவைத்தனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலைவையிட்டு வழிபட்டனர். இந்நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future