திருவாடானை: திரெளபதி வேடமிட்டு பங்குனி உற்சவ விழா

திருவாடானை: திரெளபதி வேடமிட்டு பங்குனி உற்சவ விழா
X

திருவாடானை அருகே பங்குனி உற்சவத்தை முன்னிட்டு திரெளபதி அம்மன் வேடமிட்டு கோவில் திருவிழா நடைபெற்றது.

திருவாடானை அருகே பங்குனி உற்சவத்தை முன்னிட்டு திரெளபதி அம்மன் வேடமிட்டு கோவில் திருவிழா நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பராமரிப்பில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தர்மர் மற்றும் திரெளபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி உற்சவ விழா கடந்த மார்ச் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும்.

திருவிழாவில் ஒவ்வோர்நாளும் சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து இன்று 10ம் நாள் திருவிழா நிகழ்வாக மகாபாரத போரின் 17ம் நாள் நிகழ்வினை நினைவு கூறும் வகையில் போரில் வெற்றி பெற்றவுடன் தனது தலை முடியை அள்ளி முடியும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரெளபதி அம்மன் வேடமிட்டு திருவாடானை நகர் முழுவதும் சுற்றி வீதி உலா வந்தனர். இவர்களை பொதுமக்களும் பக்தர்களும் வழிபட்டனர். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும், எத்தனையோ ஆண்டுகளை கடந்து இன்றளவும் விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture