தொண்டி அருகே விஷவாயு தாக்கி ஒருவர் பலி. இருவர் கவலைக்கிடம்

தொண்டி அருகே விஷவாயு தாக்கி ஒருவர் பலி. இருவர் கவலைக்கிடம்
X

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை

தொண்டி அருகே மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி ஒருவர் பலியானார். இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்

தொண்டி அருகே மச்சூர் கிராமத்தில் உள்ள சாகுல் ஹமீது என்பவருக்கு சொந்தமான மீன் எண்ணெய் தயாரிக்கும் கம்பெனியில் இன்று தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சேர்ந்த நவீன்(22), அனில் என்ற அஜெய் (22),ஜஸ்வின் குஸ்சூர்(21) ஆகியோர் மயக்கமடைந்தனர்.

உடனடியாக அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் நவீன் என்பவர் இறந்து உள்ளார். மற்ற இருவரும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதில் ஜஸ்வின் குஸ்சூர் என்பவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Tags

Next Story