வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
X

இராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு மற்றும் தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

இராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு மற்றும் தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் தொழில்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வடகிழக்கு பருவ மழை பொழிவதை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னேற்பாடு மற்றும் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் தெரிவித்ததாவதாவது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை தடுப்பு போல வெள்ள தடுப்புக்கான எல்லாவிதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பாதுகாக்கவும் அறிவுறுத்தி உள்ளார்கள்.

எனவே எந்தந்த இடங்களிலெல்லாம் தண்ணீர் தேங்குகின்றதோ அதையெல்லாம் தற்பொழுது நாம் ஆய்வு செய்து வருகிறோம். இராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையிலும் மற்ற நகராட்சி பகுதிகளிலும் மழைநீர் தேங்காத வகையில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு கனமழை நம்முடைய மாவட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் பொதுமக்களுக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாத வகையிலும், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் உடமைகள் ஆகியவற்றிற்கும் எந்த ஒரு பாதிப்பு இல்லாத வகையில் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மின்சார வாரியம் போன்ற அத்தியாவசிய துறைகள் அனைத்தும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!