வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
இராமநாதபுரம்: பெண் தொழிலாளியின் 100 நாள் வேலை அட்டையை வழங்காத திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சினேகவல்லிபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண் தொழிலாளியிடம், அவரது 100 நாள் வேலை அட்டையை வட்டார வளர்ச்சி அலுவலர் கொண்டு வரச் செல்லி அட்டையை வாங்கி வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் பலமுறை அவரிடம் நேரிடையாக சென்று தனது வேலை அட்டை தரும்படி கேட்ட போது தருவதாக கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் திரும்ப தராத நிலையில் மனமுடைந்த அப்பெண் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நடந்தவற்றை கூறி கண்கலங்கியுள்ளார்.

இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வட்டார வளர்ச்சி அலுவல நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் அட்டையை கேட்டபோது கொடுத்து விடுவதாக கூறி ஒரு மாதத்திற்கு மேலாக காலம் கடத்தி வந்த நிலையில், ஆத்திரமுற்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திருவாடனை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமது முக்தார் பேச்சுவார்த்தை நடத்தி அட்டையை வாங்கி கொடுத்துள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறுகையில் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் தினமும் பகல் 12 மணிக்கு மேல்தான் அலுவலகம் வருவதாகவும் எப்பொழுது கேட்டாலும் அவர் கிராம புறங்களில் கள பணியில் இருப்பதாக கூறுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி அவருக்கு நெருக்கமான நபர்களிடம் விசாரித்தபோது அவர் பகல் 12 மணிக்குத்தான் இராமநாதபுரத்திலிருந்து வேலைக்கு வருகிறார் என்ற தகவல் தெரியவருகிறது. இவர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!