மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம உதவியாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம உதவியாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
X
மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம உதவியாளர் தாக்கிய மர்ம நபர்கள். திருவாடானை போலீசார் வழக்கு பதிவு.

மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம உதவியாளர் தாக்கிய மர்ம நபர்கள். திருவாடானை போலீசார் வழக்கு பதிவு.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அறிவித்தி கிராம விருசுழி ஆற்றில் மணல் திருடப்பட்டது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து அறிவித்தி கிராம விளக்கு ரோட்டில் ஆய்வுக்காக கிராம உதவியாளர் சுரேஷ் சென்றுள்ளார். அப்போது மணல் அள்ளும் ஜேசிபி இயந்திரம், டிராக்டர் உடன் சென்ற வாகனங்களை நிறுத்தியுள்ளார்.

அப்போது மணல் மாபியாக்கள் அவரை தாக்கி, அவரது அலைபேசி பறித்து வயலுக்குள் வீசியுள்ளனர். மேலும் அவர் பின் தொடராமல் இருக்க அவரது இரண்டு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இந்நிலையில் சுரேஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் திருவாடானை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து போலிசார் கிராம உதவியாளரை தாக்கிய மணல் மாபியாக்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து