ரூ.18.14 லட்சம் கையாடல்: திருத்தேர்வளை கூட்டுறவு சங்க தலைவர் கைது

ரூ.18.14 லட்சம் கையாடல்: திருத்தேர்வளை கூட்டுறவு சங்க தலைவர் கைது
X

பைல் படம்.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.18.14 லட்சம் கையாடல் செய்ய செயலாளருக்கு உடந்தையாக இருந்த சங்கத் தலைவரை வணிக குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை திருத்தேர்வளை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கச் செயலாளராக ஆசைத்தம்பி பணியாற்றினார். இச்சங்கத் தலைவராக தங்க வேல் (67) இருந்தார். இச்சங்க செயலாளராக ஆசைத்தம்பி பணியாற்றிய கடந்த 2019 ஏப்.4 முதல் 2020 ஜன.7 வரையிலான சங்க நிதி நடவடிக்கைகளை, துணை பதிவாளர் தலைமையில் தணிக்கை நடந்தது.

இக்கால கட்டத்தில், திருத்தேர்வளை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களிடம், 2020 ஜன.6 வரை வசூல் செய்த ரூ.16.83 லட்சத்தை மத்திய கூட்டுறவு வங்கி கணக்கில் செலுத்தாமலும், கூட்டுறவு சங்க உறுப்பினர் இருவரின் போலி கையெழுத்திட்டு 2019 டிச.20ல் ரூ.ஒரு லட்சம் மோசடி, உரம் விற்ற தொகை ரூ.6 ஆயிரம், நகை மதிப்பீட்டாளருக்கு ரூ.24,500 கூலி கொடுத்ததாக நிதியிழப்பு என, ரூ.18.14 லட்சம் கையாடல் செய்யப்பட்டது, தணிக்கையில் தெரிய வந்தது.

இந்த நிதி கையாடலுக்கு, தலைவர் தங்கவேல் உடந்தையாக இருந்தார். இது குறித்து , வணிக குற்ற தடுப்பு பிரிவு போலீசில் துணை பதிவாளர் (பொ) கோவிந்தராஜன் புகார் அளித்தார். இதன்படி 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த ராமநாதபுரம் வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், தங்கவேலுவை கைது செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!