திருவாடானை அருகே கார் கவிழ்ந்து விபத்து: மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழப்பு

திருவாடானை அருகே விபத்துக்குள்ளான கார்.
திருவாடானை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து. மருத்துவக் கல்லூரி மாணவர் பலி.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சவேரியார்பட்டிணம் அடுத்த திருச்சி-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இராமநாதபுரத்தில் இருந்து சிவகங்கை நோக்கி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் அஜித் மித்திலேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காந்திநகர் பகுதியை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் காரில் திருச்சி-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அஜித் மிதிலேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மாணவி ஐஸ்வர்யா லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக இராமநாதபுரம் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து திருவாடானை போலீசார் விசாரணை செய்து வருகிறார். இந்நிலையில் விபத்து நடந்த பகுதி அருகில் ஹார்டுவேர் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu