தொண்டி பகுதியில் கடல் பசுவை அறுத்து விற்பனை செய்ய முயன்றவர் கைது
தொண்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட கடல் பசுவை அறுத்து விற்பனை செய்ய முயன்றஒருவர் கைது.200 கிலோஇறைச்சியை பறிமுதல் செய்து தப்பியோடிய ஒருவரை வனத்துறையினர்தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட கடல் பசுவைப் பிடித்து வெட்டி இறைச்சி விற்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனஉயிரின காப்பாளர் பகான்ஜக்தீஷ்சுதாகர் அறிவுரையின் பேரில் உதவி வனப்பாதுகாவலர்கணேசலிங்கம் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் வனஉயிரினவனச்சரக அலுவலர் ஜெபஸ் தலைமையில் வனத்துறையினர் தொண்டி எம்ஜிஆர் நகர்,தர்கா காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மீன் கடை அருகே சோதனை செய்தபோது அங்கு நம்புதாளையைச் சேர்ந்த வெண்ணியப்பன் மகன் ராக்கப்பன் (30) அவருடைய சகோதரர் பழனி (25) ஆகிய இருவரும் வனத்துறை அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
இதில் ராக்கப்பன்பிடிபட்டார். பின்னர் ராக்கப்பனை விசாரணை செய்தபோது அதிகாலை 300 கிலோ எடை கொண்ட பெண் கடல் பசு ஒன்று பழனி மீன்பிடி வலைகளில்சிக்கியதாகவும் அதனை நம்புதாளைக்கு கொண்டுவந்து தனது வீட்டின் இடைப்பட்ட காலிமனை பகுதியில் வைத்து வெட்டி பார்சல் போட்டு தொண்டி எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள தர்கா காலனி பகுதியில் மீன் கடையில் வைத்து விற்பனை செய்ய தெர்மாக்கோல் பெட்டியில் வைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 200 கிலோ கடல் பசு இறைச்சியை கைப்பற்றிய வனத்துறையினர் அதற்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்து ராக்கப்பனை திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய பழனியைவனத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu