/* */

பழங்குளம் சிற்றூராட்சி தலைவராக கரு.பார்த்திபன் இன்று பதவியேற்பு

பழங்குளம் சிற்றூராட்சி தலைவர் பதவிக்கான இடைதேர்தலில் வெற்றி பெற்ற கரு.பார்த்திபன் இன்று பதவியேற்றார்.

HIGHLIGHTS

பழங்குளம் சிற்றூராட்சி தலைவராக கரு.பார்த்திபன் இன்று பதவியேற்பு
X

பதவியேற்றுக்கொண்ட கரு.பார்த்திபன்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பழங்குளம் சிற்றூராட்சி தலைவராக இருந்த கருப்பையா காலமானதையடுத்து அப்பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது.

இதில் கருப்பையா மகன் பார்த்திபன் ஆட்டோ ரிக்சா சின்னத்திலும் வீரய்யா மகன் துரைராஜ் பூட்டு சாவி சின்னத்திலும் போட்டியிட்டனர். அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 9ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் துறைராஜை விட 55 வாக்குகள் வித்தியாசத்தில் 581 வாக்குகள் பெற்று கரு.பார்த்திபன் வெற்றி பெற்றார். வெற்றிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனையடுத்து தலைவர் பதவியேற்கும் நிகழ்ச்சி 20ம் தேதியான இன்று பழங்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. திருவாடானை வட்டார வளர்ச்சி ஆணையர் பாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். உறுதிமொழி ஏற்று பதவியேற்ற கரு.பார்த்திபன் தனது தந்தை எவ்வாறு மக்களுக்கு சுயநலம் பாராது பணி செய்தாரோ அவ்வாறே தானும் ஊராட்சி மக்களுக்கு சாதி பாகுபாடின்றி நடுநிலையோடு நேர்மையான முறையில் பணி செய்வேன். இன்னும் பல்வேறு திட்டங்களை கிராமத்திற்கு செய்ய திட்டமிட் முள்ளேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள், காவல்துறையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Oct 2021 4:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை