இராமநாதபுரத்தில் திடீர் கனமழை; பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

இராமநாதபுரத்தில் திடீர் கனமழை; பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
X

மாதிரி படம் 

இராமநாதபுரம் மாவட்டத்தில் திடீர் கன மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி.

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென்று கனமழை பெய்தது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, மஞ்சூர், இராமநாதபுரம், சத்திரக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். திடீர் மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!