தொடர்மழையால் திருவாடானை பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு
திருவாடானை தொகுதி தொடர் மழை காரணமாக திருவாடானை பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியது. கிராமங்களின் போக்குவரத்து துண்டிப்பு.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ் மங்கலம், நகரிகாத்தான், தொம்மையாபுரம், ஓரியூர், திருப்புனவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதி கண்மாய், குளங்கள், வயல் வெளிகள் மற்றும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
கனமழை காரணமாக, மணிமுத்தாறு ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால் திருவாடானையில் இருந்து நகரிகாத்தான், தொம்மையாபுரம் வழியாக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் கிராமங்களுக்குச் செல்லும் தரைப்பாலத்தை தண்ணீா் மூழ்கடித்துச் செல்கிறது. இதனால் அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல திருப்புனவாசல் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அதன் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் அதில் நீச்சலடித்து குளித்து வருகிறனர். பல ஆண்டுகளாக தரைப்பாலத்தை அகற்றி மேம்பாலம் கட்டித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் எவ்விதப் பயனும் இல்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu